Font Size

Layout

Menu Style

Cpanel

வாருங்கள் பெர்சே பேரனியில் களம் இறங்குவோம் - ஹிண்ட்ராப் ஆதரவாளர்களுக்கு ஒரு முழக்கம்

 ganesan-n-hindraf-1-255x300.jpg சமூகத்தின் மேற்தட்டில் அழுகல் தன்மை ஏற்பட்டால் அதிகமாக பாதிக்கப்படுவது சமூகத்தில் அடி மட்டத்தில் இருப்பவர்கள் தான் என்பது வரலாற்றுபூர்வ உண்மையாகும். ஒவ்வொரு நாடும் தமது வரலாற்றில் மாற்றங்களின் அனுபவங்கலை அவ்வப்போது காண்கின்றன. மாற்றங்களை, அதிலும் அடிப்படை மாற்றங்கள் விரும்பும் மக்கள் இந்த மாற்றுதின் சாதக சூழ்நிலைகளை உணர வேண்டும். அம் மாற்றங்களினால் ஏற்படும் வாய்புக்களைப் பயன்படுத்திக் கொள்வதற்கு பரந்த சகோதரத்துவ அடிப்படையில் ஒன்றுபட்டு நாட்டின் வரலாற்றை மக்கள் திசையில் திருப்ப முயல வேண்டும் .

கீழ் மட்டத்தில் இருக்கக்கூடிய ஓரங்கட்டப்பட்ட ஏழை இந்திய சமூகம் ஆளும் மேற்தட்டின் ஊழல் , அடக்கு முறை , சுய நலப் போக்கு கொளகைகளின் அழுகல் தன்மையினால் மிக மோசமாகப் பாதிப்படைந்துள்ளது. அடிப்படை கொள்கை மாற்றங்கள் அவர்களுக்குத் தான் மிக அவசியமாகத் தேவைப்படுகிறது. இதில் ஒன்றும் புதிது அல்ல,இவையெல்லாம் நாம் நன்கு அறிந்தவைதான்.

ஆகவே அடிப்படை மாற்றத்திற்கான செயலாற்றும் முன்னேற்ற மனப்பான்மையுடைய மற்ற சக்திகளுடன் இந்தியர்கள் அனைத்தும் கூடி பங்கேற்றி ஒரு மாபெரும் மக்கள் போராட்டமாக்க வேண்டும் .மாற்றத்திற்கான சக்தியை நம்மால் ஒன்று சேர்ந்து உருவாக்க முடியும். அந்த சூழ்நிலை இப்பொழுது பெர்சே பேரணியின் மூலமாக எழும்புகின்றது. இதைத் நாம் அறிவோம். .

ஒரு சிலருக்கு இம்மாதிரி மாற்று மக்கள் இயக்கங்களுடன் கூட்டு முயற்சியினால் இந்திய ஏழை மக்களுக்கு கடைசியில் ஒன்றுமே கிடைக்காமல் போய்விடுமோ என அச்சம் தெரிவிக்கிறார்கள் , அனால் நன்கு யோசித்துப் பார்த்தோமானால், இம்மாதிரியான் வாய்ப்பு எப்பொழுது அடுத்த வரும் என யாராலும் சொல்ல முடியாது அல்லவா .இம்மாதிரியான் முயற்சியினால் என்ன விளைவுகள் வரக்கூடும் எனவும் யாராலும் சொல்ல முடியாது . ஒன்று மட்டும் ம் நிச்சயம், இது ஒரு மாபெரும் மக்கள் போராட்டம் ஆகிவிட்டால் மாற்றங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கின்றது என தெளிவாக கூறலாம்.

கடுமையான பொருளாதார சரிவுகளோடு நாடு மிக மோசமான அரசியல் நெருக்கடிகளையும் எதிர் நோக்குகிறது . கடந்த கால ஆளும் தரப்பினரின் கொள்கைகள் தான் இந்த நிலையை ஏற்படுத்தி இருக்கிறது. இனவாதத்திற்கான கட்டமைப்பு விரிவாக்கம் ,ஊழல் தரப்பினரின் கைகளில் நாட்டின் அதிகாரத்தை குவித்தல், அரசு அமைப்புகளின் செயலற்ற தன்மை , சட்ட ஆட்சி தொடர்ந்து சரிதல், தேசிய வளத்தை தவறாகப் பயன்படுத்துதல் போன்றவற்றால் இப்பாதிப்புகள் ஏற்படுகின்றன.

மான்யங்களை படிப்படியாக அகற்றுதல் ,ஜி.எஸ்.டி . அறிமுகம் ,மந்தமான சம்பள முறை , வெளி நாட்டுத் தொழிலாளர்களின் அதிக அளவிலான எண்ணிக்கை, விலை ஏற்றங்கள் , அளவில்லா இனவாதம் ,தொடர்ந்து நாடற்ற நிலையில் இருப்பது போன்றவை ஒடுக்கப்பட்ட நமது சமுகத்தை குறிப்பாக பாதிக்கிறது.

மோசமான சமூக பொருளாதார வலையில் சிக்கியுள்ள நமது சமுகத்தின் ஓரங்கட்டப்பட்ட மக்களை நிரந்தரமாக மீட்பதற்கு இக்கொள்கைகளை மாற்ற வேண்டும் . உண்மையான சக்திமிக்க நெருக்குதல் இல்லாமல் ,சமுகத்தின் மீது திணிக்கப்பட்ட ஒடுக்கு முறையான சோர்வுடைய கொள்கையை ஆளும் மேற்தட்டு தரப்பினர் மாற்றவே மாட்டார்கள். .

இது போன்றதொரு பேரணி ஒன்றால் நடப்பு அரசியல் உயரடுக்காளர்கள் உடனடியாக பதவி விலகி விடுவார்கள், மாற்றங்கள் உடனே வருமென எதிர்பார்க்க முடியாதென்பதை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் இம்மாதிரியான் பல பல தரப்புகள் அடங்கிய மாபெரும் பேரணியினால் மாற்றங்கள் ஏற்படுத்த தகுதியுள்ள புதிய கூட்டணி அமைப்புக் களை உருவாக்க முடியும்.பல்வேறு நோக்கங்களுடன் பிரிந்து கிடக்கும் அரசியல் சக்திகள் இதன் வழி மீண்டும் இணைந்து புதிய உருவாக்கம் பெறுவதற்கும் இது வழி வகுக்கும் .பதில் அளிக்கப்படாத பல கேள்விகலுக்கும் இதனால் பதில் கிடைக்கும்.அரசியல் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு முற்போக்கான சக்திகள் ஒருங்கிணையும் வாய்ப்பையும் இப்பேரணி ஏற்படுத்தித் தர வாய்ப்புண்டு. அதற்கான ஒரு சோதனைகளமாகவும் இப்பேரணி அமையும் .

புது அரசியல் அமைப்புகள் இம்முயற்சினால் உருவாகுமேயானால் ஹிண்ட்ராப் போன்ற இயக்கங்கள் இந்திய ஏழை மக்களுக்கு மிக அவசியமான் அடிப்படை கொள்கைகளுக்காக தொடர்ந்து போராடுவதற்கான சூழ்நிலை உருவாகும் . இன ரீதியிலான அமைப்பைக் கொண்ட மக்கள் தொகையில் சிறுபான்மை சமூக நலனுக்கு அடிப்படையாக இருக்கக்கூடிய சட்ட ஆட்சியில் சில மேம்பாட்டையும் மாற்றத்தையும் இதன் வழி காணலாம். ஆகவே நாம் அனைவருக்கும் தேவைப்படக்கூடிய மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு நாட்டில் உள்ள அரசியல் சக்திகளை மீண்டும் ஒருங்கிணையச் செய்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்தும் இப்பேரணியில் அனைத்து ஹிண்ட்ராப் ஆதரவாளர்களும் முழு அளவில் பங்கேற்க வேண்டும் என்று கேட் டுக் கொள்கிறேன். வாருங்கள் களம் இறங்குவோம்.

நா.கணேசன் 
தேசிய ஹிண்ட்ராப் ஆலோசகர்