Font Size

Layout

Menu Style

Cpanel

அனைத்துலக மனித உரிமை தரத்துக்கு ஏற்ற வகையில் ஜனநாயக மரபுகளை கடைபபிடிக்கவும் -ஹிண்ட்ராப்

hindraf-uk2.jpg


அனைத்துலக மனித உரிமை தரத்துக்கு ஏற்ற வகையில் ஜனநாயக மரபுகளை கடைபபிடிக்கும் வகையில் நாட்டுக்காகவும் , மக்களுக்காகவும் இரு தரப்பு அரசியல் வாதிகளும் கை கோர்த்து செயல்பட வேண்டுமென்று ஹிண்ட்ராப் தலைவர் வேத மூர்த்தி மனித உரிமை நாளையொட்டி அறைகூவல் விடுத்துள்ளார் .

இன, சமய பாகு பாடின்றி அணைத்து மக்களின் தேவைகளையும் உள்ளடக்கி தெளிவற்ற சட்டக் கூறுகளை அகற்றி ஜனநாயகத் தன்மைக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் சட்ட திருத்தங்கள் செய்யப்படுவதற்கு ஆளும் கட்சியினரும், எதிர்க் கட்சியினரும் ஒன்று பட்டு செயல் பட வேண்டுமென்று வேத மூர்த்தி அறிக்கை ஒன்றில்

london suit file 1.jpgதெரிவித்துள்ளார். 1948 ஆம் ஆண்டு ஐக்கிய நாட்டு சபை அனைத்துலக மனித உரிமையை பிரகடனம் செய்தது.ஐ.நா. மனித உரிமை குழுவில் மலேசியா இரணடு தவணை iடம் பெற்றுள்ளது.1966 ஆம் ஆண்டு சமூக , பண்பாட்டு , சிவில், அரசியல் உரிமைகள் வலியுறுதப்பட்டன.'

சுதந்திரம் அடைந்து 58 ஆண்டுகள் ஆகிவிட்டன. தொடக்க கால தலைவர்களின் நோக்கத்திற்கு ஏற்ற வகையில் நாட்டின் மேல் முறையீட்டு நீதி மன்றம் விளக்கம் அளிப்பதில் தடுமாற்றம் காணப்படுகிறது.

ஆகவே கூட்டரசு அரசியலமைப்பை மறு பரிசீலனை செய்யும் தருணம் வந்து விட்டதாக ஹிண்ட்ராப் கருதுகிறது. நமது சுதந்திரத் தந்தை துங்கு அப்துல் ரஹ்மானின் நிலையைப் பயன்படுத்தி பிரிட்டன் நாடாளுமன்றம் ஐயப்பாடான மலாயன் அரசியலமைப்பை அங்க்கீகரிதுளதென்று ஹிண்ட்ராப் வலியுறுத்துகிறது .

நமது அரசியலமைப்பு உருவாக்கத்தில் என்ன நடந்தது என்று மலேசிய மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் மலேசிய அரசாங்கம் சுதந்திரததுக்கு முந்தைய அனைத்து ஆஅவணங்க்களையும் வெளியிட வேண்டும். இதன் வழி ரெய்ட் அரசியலமைப்பு ஆணைய பரிந்துரைகள் எப்படி பாதிக்கப்பட்டன் என்று கூட்டங்களின் ரகசிய குறிப்புகள் வழி தெரிந்து முடியும். அனைத்துலக சட்டங்கள் மரபுகள் மீறப்பட்டதற்கான விளக்கங்களையும் பெற முடியும்.

அவர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார் . அரசியலமைப்பின் 153 ஆவது விதி பிரச்னைக்குரியதாக இருக்கிறது. அதனை மிகவும் கவனமாக அறிவார்ந்த நிலையில் விவாதிக்க வேண்டும் .

தற்போதைய கால யுகத்துக்கு ஏற்ப கடந்த கால வரலாற்று தவறுகளில் திருத்தம் செய்ய வேண்டும். காலனித்துவ ஆளுமையாளர்களால் வரையப்பட்ட 153 ஆவது விதியின் சில பகுதிகள் தெளிவற்று இருக்கிறதென்பதை ஹிண்ட்ராப் எப்போதும் கூறி வருகிறது.

அதே வேலை 153 ஆவது விதியின் இரண்டாம் பாகம் மலாய்க்காரர் அல்லாத சமூகததிற்கு சட்ட பூர்வ உரிமைகளை அளிக்கவில்லை . அதற்குப் பதில் சட்ட பூஊர்வ நலன்களை மட்டும் அளித்தது .

அடிப்படை மனித உரிமைக்கு ஏற்ப மலாய்க்காரர் அல்லாத சமுகத்திற்கும் சட்ட பூர்வ உரிமைகள் அளிக்கப்படிருக்க வேண்டும். காலனித்துவ ஆளுமையாளர்கள் அனைத்து பிரஜைகளுக்கும் சமத்துவ உத்தரவாதத்தை அளிப்பதற்குப் பதில் மலேசியாவில் இனப்பாகு பாட்டை ஏற்படுத்தும் விதிகளை வகுததி ருக்கிறது. -

சுதந்திரத்துக்கு முன்பு திடிரென்று துங்கு பிரிட்டன் தூதரால் உருவாக்கப்பட்ட மலாய்க்காரர்களின் சிறப்பு நிலை மலேசிய சமூகத தில் இது வரை இனப்பாகு பாட்டையும் பிரிவினையையும் ஏற்படுத்தி வந்துள்ளது.1957 ஆம் ஆண்டு அரசியலமைப்பில் ஓராங் அஸ்லி/அசால்களுக்கு எவ்வித அங்கீகாரமும் கொடுக்ப்படாமல் விடுபட்டனர் .

1963 ஆம் ஆண்டு சாபா, சரவா, மலேசியாவில் இணைக்கப்பட்ட போது ஊராங் அஸ்லி /அசால் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டனர். செயல் தரப்பின் கூட்ட குறிப்புகள் ஆராயப்படுமானால் துங்கு தலைமையிலான அரசியலமைப்பின் சிதைவுகளின் உணமை தெரிய வரும்.

ரெய்ட் கமிஷனால் பரிந்துரைக்கப்பட்ட 8 ஆவது விதி london suit file 2.jpgஅனைத்து குடிமக்களும் சமமாக நடத்தப்படுவதற்கு வழி வகுத்தது. அது 153 ஆவது அரசியலமைப்பில் இனப்பாகுபாட்டீற்காக திருத்தப்பட்டு மலேசியாவில் ஏராளமான இனப்பாகுபாட்டை ஏற்படுத்தி விட்டது . துங்கு மற்றும் அவரது பிரிட்டிஷ் ஆளுமையாளர்களால் மலாயாவில் உள்ள அனைத்து இனங்களுக்கும் சமமான கல்வி வாய்பபுகள், கல்விக்கான சம நீதி போன்ற அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டன.

12 ஆவது விதியில் எஸ் என்ற ஆங்கில எழுத்து நீக்கப்பட்டதால் மலேசிய நீதித் துறையின் சமய சுதந்திரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் வியாக்கியானங்கள் எழுந்தன . சட்ட ஆட்சி செயலாக்கத்தை 4 ஆவது விதியிலிருந்து நீக்க வேண்டுமென்று துங்கு வலியுறுத்தியது மிகவும் பாதிப்பானதாகும்.

இதனால் நாடாளுமன்ற சட்டத்தின் கீழ் இயற்றப்படும் அரசியலமைப்புக்கு அப்பாற்பட்ட சட்டக் கூறுகளை உச்ச நீதி மன்றத்தில் நிவாரணம் பெறுவதற்கு முடியாமல் போய்விட்டது.

துங்குவின் வலியுறுததலினால் அரசியலமைப்புக்கு நீதி மன்றங்கள் காவலராக இருக்கும் அதிகாரங்கள் அகற்றப்ப்பட்டன. இன- சமய பாகுபாடு அற்ற ஜனநாயகத்தை நிலை நாட்டுவதற்கு இரு தரப்பு அரசியல் வாதிகளும் கை கோர்த்து செயல்பட வேண்டுமென்று இந்த மனித உரிமை நாளில் தாம் கேட்டுக் கொள்வதாக வேத மூர்த்தி தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்